‘லவ் ஆக்ஷன் டிராமா’ (2019) திரைப்படத்தில் நிவின் பாலி மற்றும் நயன்தாரா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தற்போது, இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் டியர் ஸ்டூடென்ட்ஸ். இந்தப் படத்தை சந்தீப் குமார் மற்றும் ஜார்ஜ் பிலிப் ராய் ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர்
இத்திரைப்படத்தை நிவின் பாலி தயாரிக்கிறார். இதில் நயன்தாரா இணைந்துள்ளதை, முன்னதாக ஒரு ஸ்பெஷல் வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்திருந்தது. தற்போது கடைசிக் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
‘டியர் ஸ்டூடென்ட்ஸ்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படம், பள்ளிக்கூட வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் ‘டியர் ஸ்டூடெண்ட்ஸ்’ படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி உள்ளது.