தென்னிந்திய சினிமா மட்டுமின்றி பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகை வலம் வருபவர் தமன்னா. இவரது கிளாமர் குத்துப்பாடல்கள் ரசிகர்களால் எப்போதும் கொண்டாடப்படுபவை.

பால் நிற மேனி நடிகை என வர்ணிக்கப்படும் நடிகை தமன்னா, தனது பளபளப்புக்கு என்ன காரணம் என்ற ரகசியத்தை சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில், நான் ஒரு சரும பராமரிப்பு முறையைப் பின் பற்றி கொண்டு உள்ளேன். அதுவே என் இந்த சருமத்துக்கான ரகசியம். இதை தினமும் நாம் செய்வதுதான் சரியாக இருக்கும்.
உடற்பயிற்சி போன்றதுதான் சரும பராமரிப்பு. அதுமட்டுமின்றி நல்ல மனநலம், நல்ல உணவு, தூக்கம் இவையும் தான். இவை மொத்தமும் பிரைட் சருமத்தை கொடுக்கும். இதை தவறாமல் செய்தால் தான் பலன் என்றுள்ளார் தமன்னா.