தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி, ஹீரோவாகவும் பல படங்களில் நடித்துவரும் யோகி பாபு, தற்போது இயக்குநர் அமுத சாரதி இயக்கத்தில் உருவாகும் ‘சன்னிதானம் பி.ஓ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப்படம், யோகி பாபுவின் நடிப்பை முற்றிலும் புதிய பரிமாணத்தில் காண்பிக்கும் என கூறப்படுகிறது. இதில் யோகி பாபுவுடன் ரூபேஷ் ரெட்டி, சித்தாரா, கஜராஜ், மேனகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை மது ராவ், விவேகநாந்தன் மற்றும் சபிர் பதான் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
கிராமப்புற வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதைநாயகத்துடன் உருவாகும் இப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.