நடிகை சைத்ரா ரெட்டி, சரிகம நிறுவனம் தயாரிக்கின்ற புதிய இணையத் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இத்தொடரில் குரு லட்சுமணன் கதாநாயகனாக நடித்துவருகிறார். இந்த தொடருக்கு ‘லவ் ரிட்டர்ன்ஸ்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மேலும், இதில் பர்வீன், பேபி லிதன்யா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த தொடரை சதாசிவம் செந்தில்ராஜன் மற்றும் அர்ஜுன் டிவி ஆகிய இருவரும் இயக்கி வருகின்றனர்.
‘லவ் ரிட்டர்ன்ஸ்’ எனும் இந்த இணையத் தொடர், திருமணமான நாயகனின் வாழ்க்கையில், அவனது முன்னாள் காதலி மீண்டும் திரும்ப வருவதால் ஏற்படும் குழப்பங்களையும், முன்னாள் காதலியும் மனைவியும் மோதும் சூழ்நிலைகளையும், நாயகன் அவற்றை எப்படி சமாளிக்கிறான் என்பதையும் நகைச்சுவையுடன் விவரிக்கின்றது. இதனால் அனைத்து தரப்பினருடைய ரசிகர்களையும் இந்தத் தொடர் மிகவும் ஈர்த்துள்ளது. ‘லவ் ரிட்டர்ன்ஸ்’ இணையத் தொடர் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு சரிகமா யூடியூப் சேனலில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.