விஜய் சேதுபதி, நித்யா மேனன் மற்றும் பலர் நடித்திருக்கும் ‘தலைவன் தலைவி’ திரைப்படம், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் திரைக்கு வந்தது. இந்தப் படம் தற்போது உலகளவில் ரூ.75 கோடி வசூலை அடைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

திரைப்படம் வெளியான முதல் மூன்று நாட்களில் ரூ.25 கோடி வசூலித்தது என்றும், ஒரு வாரத்தில் ரூ.50 கோடி வசூலித்தது என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, படம் வெளியாகி 11 நாட்களுக்குள் ரூ.75 கோடி வசூலை எட்டியுள்ளது.
இந்த ஆண்டு விஜய் சேதுபதி நடித்து வெளியான ‘ஏஸ்’ திரைப்படம் எதிர்பாராத வகையில் தோல்வியை சந்தித்த நிலையில், ‘தலைவன் தலைவி’ திரைப்படம் அவரது ரசிகர்களிடையே மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த திரைப்படங்களில், ‘மகாராஜா’ திரைப்படம் ரூ.200 கோடி வசூலை நெருங்கிய நிலையில் முதலிடத்தில் உள்ளது. அதற்குப் பிறகு தற்போது ‘தலைவன் தலைவி’ இரண்டாவது இடத்தில் உள்ளது.