கிராமங்கள் பக்கம் கூட திரையரங்குகள் அதிகம் இல்லை என்பதும், இது போன்ற படங்கள் அங்குள்ள மக்களை சென்றடைவதில்லை என்பதும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக குஜராத்தில் உள்ள கொட்டாய் என்கிற கிராமத்திற்கு சென்று அங்குள்ள கிராமத்து மக்களுக்கு தற்காலிக திரை கட்டி இந்த அவரின் சிதாரே ஜமீன் பர் திரையிட்டு காட்டியுள்ளார் அமீர்கான்.அந்த மக்களுடன் அமீர்கானும் சேர்ந்து படம் பார்த்துள்ளார். இது கடந்த 25 வருடங்களுக்கு முன்பு அமீர்கான் நடிப்பில் உருவான ‛லகான்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற கிராமமாகும். அந்த ஞாபகார்த்தம் காரணமாக இந்த கிராமத்து மக்களுக்கு தனது படத்தை இப்படி திரையிட்டுள்ளார் அமீர்கான்.
