கே.ஜி.எப் மற்றும் கே.ஜி.எப் 2 ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. தொடர்ந்து, நடிகர் நானியுடன் இணைந்து நடித்த ‘ஹிட் 3’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரூ.100 கோடியை கடந்த வருவாயை ஈட்டியது. இந்த படத்தில் ஸ்ரீநிதி நடித்த கதாபாத்திரம் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையிலும் சிறந்த வரவேற்பைப் பெற்றது.

தற்போது, ‘புலாசா காடா’ என்ற புதிய திரைப்படத்தில் அவர் நடித்துவருகிறார். இதில் இரண்டாவது கதாநாயகியாக ராஷி கண்ணா நடித்துவருகிறார். இந்நிலையில், ஸ்ரீநிதி ஷெட்டி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்களில், ஒரு குழந்தையை தனது மடியில் அமர்த்தி அன்புடன் பாலூட்டும் அழகிய காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்த புகைப்படங்கள் பரவலாகும் சூழலில், ஸ்ரீநிதி தனது சமூக வலைதளத்தில் இதுகுறித்து, “நான் விழித்த போது என் குழந்தைகள் என் பக்கத்தில் இருந்தார்கள்… நான்தான் சிறந்த அத்தை!” என உணர்வுபூர்வமாக பதிவு செய்துள்ளார்.