தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய வெற்றியைப்பெற்றது. தற்பபோது பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘மதராஸி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் ஆடியோ உரிமையை ஜங்கிலி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.’மதராஸி’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில் மதராஸி படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘மதராஸி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘சலம்பல’ பாடலை சூப்பர் சுப்பு வரிகளில் சாய் அபயங்கர் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.