வெபேரர் பிலிம்ஸ் மூலமாக துல்கர் சல்மான் தயாரிக்கும் அடுத்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. ‘பிரேமலு’ புகழ் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், சந்து சலீம் குமார், அருண் குரியன், சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் இணைந்துள்ளனர்.

இத்திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வெபேரர் சினிமாடிக் யூனிவர்ஸின் முதல் படமாக உருவாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் துல்கரும், டோவினோ தாமஸ் ஆகியோரும் சிறப்பு தோற்றத்தில் இதில் நடிக்கின்றனர்.
படத்தின் டீசர் ஜூலை 28 அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.