ஒரு ஓட்டலை நடத்திக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதியை, பெற்றோரின் எதிர்ப்பை மீறி நித்யாமேனன் காதலித்து திருமணம் செய்கிறார். ஆனால் இந்தக் காதல் திருமண வாழ்க்கையில் குழப்பங்கள் வரத் துவங்குகின்றன. ஓட்டலின் காசுப்பெட்டியில் நித்யா அமர்வதைத் தொடர்ந்து, விஜய் சேதுபதியின் தாய் தீபாவும், தங்கை ரோஷிணியும், நித்யாவுடன் உரசல் ஏற்படுகிறது. இது காரணமாக, தம்பதிக்குள் சண்டையும் உருவாகிறது.

அதற்கிடையில், இருவருக்கும் ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது. பின்னர், விஜய் சேதுபதிக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதை அறிந்த நித்யா, கோபத்தில் தாய்வீட்டிற்கு சென்று விடுகிறார். அவரின் பிரிவால் வருந்தும் விஜய் சேதுபதி, குழந்தைக்கு மொட்டை அடிக்கும் நிகழ்ச்சி தனது அனுமதியின்றி நடப்பதை அறிந்து கோவிலுக்கு புறப்படுகிறார். அதன்பின் அவர்களது வாழ்க்கை மீண்டும் இணைந்ததா அல்லது இன்னும் பிரிந்தே தொடர்ந்ததா என்பதே படத்தின் மீதி கதை.
விஜய் சேதுபதி தனது இயல்பான நடிப்பால் படத்தில் மறுபடியும் கலக்குகிறார்.இயக்குனர் பாண்டிராஜின் இந்த கதை பலரையும் எளிதாக எமஷோனலாக கனெக்ட் செய்கிறது. நித்யாமேனனும் கதாபாத்திரத்தில் சரியாக பொருந்தியுள்ளார். விஜய் சேதுபதியும் நித்தியா மேனனும் கிரமாத்து பாணியில் போட்டிபோட்டு நடித்துள்ளனர். குறிப்பாக கணவன் மனைவி இடையேயான அன்பு எமோஷன் ரொமான்ஸ் சண்டை கோபம் வெறுப்பு என அத்தனையும் கலந்த ஒரு படைப்பாக தலைவன் தலைவி என்ற தலைப்புக்கு ஏற்றவாறு கதாபாத்திரங்கள் அமைந்துள்ளன.
தீபா, ரோஷிணி, செம்பன் வினோத், சரவணன், யோகிபாபு, மைனா நந்தினி உள்ளிட்ட பலரும் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர். ஒளிப்பதிவாளர் சுகுமாரின் காட்சிகள் ரசிக்க வைக்கும். சந்தோஷ் நாராயணனின் இசையில் “பொட்டல முட்டாயே…” பாடல் தனிச்சிறப்பு.
‘கணவன்-மனைவி சண்டையில் உறவினர்கள் தலையிடாமலிருந்தால் பிரச்சனைகள் எளிதில் தீரும்’ எனும் கருத்தை நையாண்டி மாறாக, நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.