ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “பிளாக் மெயில்”. இப்படத்தில் தேஜூ அஸ்வினி நடித்துள்ளார். இந்தப் படத்தை, “கண்ணை நம்பாதே” போன்ற திரைப்படங்களை இயக்கிய மு.மாறன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் ஆடியோ மற்றும் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஆதிக், என்னை ‘திரிஷா இல்லைன்னா நயன்தாரா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் செய்தவர் ஜி.வி. பிரகாஷ். நாங்கள் பல ஆண்டுகளாக நட்புடன் இருக்கிறோம். இந்த படத்தின் கதை மிகவும் வித்தியாசமானது. மேலும், இயக்குநர் மாறனுக்கு இரவு நேரக் காட்சிகள் பெரிதும் பிடிக்கும். ஆனால் ஜி.வி. பிரகாஷுக்கு இரவு நேரம் பிடிக்காது. அவர் எப்போதும் வெளிச்சம் உள்ளபடி தூங்குவார். எனவே இந்த படத்துக்குப் பிறகு அவர் மாறி இருப்பார் என நம்புகிறேன் என்றார்.
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அளித்த பேட்டியில், என் அடுத்த படம் அஜித் அவர்களை வைத்து உருவாகும் என்பது உறுதி. இது ‘குட் பேட் அக்லி’ போல் இருக்காது. ஒரு மாறுபட்ட ஜானரில் இருக்கும். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும், தொடர்ந்து அப்டேட்களும் விரைவில் வெளிவரும் என உறுதியுடன் தெரிவித்துள்ளார்.