விஜய் சேதுபதியின் மிகப்பெரிய கம்பேக் என அனைவராலும் பாராட்டப்பட்ட திரைப்படம் “மகாராஜா” எனலாம். நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம், ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றது. பின்னர் சீனாவிலும் இந்த படம் வெளியானது மற்றும் அங்கு மிகச் சிறப்பாக ஓடியது. இந்த வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் நிதிலன் சாமிநாதன் அடுத்து யாரை இயக்கப் போகிறார் என்பதை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், இயக்குநர் நிதிலன் சாமிநாதன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் புதிய படத்திற்காக இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நித்திலன் கூறிய கதை, ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்ததாகவும், இப்படம் திட்டம் திட்டமிட்டபடி அமையுமானால், இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
‘ஜெயிலர் 2’ படப்பணிகளை முடித்தவுடன் ரஜினிகாந்த் புதிய படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், இயக்குநர்கள் எச். வினோத் மற்றும் விவேக் ஆத்ரேயா ஆகியோரும் சூப்பர் ஸ்டார்-க்கு கதை சொல்லியுள்ளதாகவும் சில பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. கூடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அடுத்த படத்தை இயக்க போகும் இயக்குனர் யார் என்பது உறுதியாக தெரியவரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.