அனல் அரசு இயக்கத்தில் விஜய்சேதுபதி மகன் சூர்யா சேதுபதி நடித்த பீனிக்ஸ் பட நன்றி தெரிவிக்கும் விழா சமீபத்தில் நடைப்பெற்றது, இதில் பேசிய சூர்யா சேதுபதி, ‛‛நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பேச்சு வரலை. விமர்சனங்களை தாண்டி படம் வெற்றி பெற்றுள்ளது. இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குனர், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்க்கு நன்றி. இந்த படத்தின் தயாரிப்பாளர் ராஜலட்சுமி இயக்குனரின் மனைவி. அவர் எனக்கு அவ்வளவு சப்போர்ட் ஆக இருந்தார் அவருக்கும் நன்றி என்றார்.
