நடிகை ப்ரீத்தி முகுந்தன், கவின் நடித்த ‘ஸ்டார்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். அதனைத் தொடர்ந்து, இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் இசையில் வெளியான “ஆச கூட” என்ற வீடியோ பாடலில் நடித்து சமூக வலைதளங்களில் பெரும் வைரலானார்.

தற்போது, பான் இந்தியன் திரைப்படமாக உருவாகியுள்ள ‘கண்ணப்பா’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்த வெற்றியைத் தொடர்ந்து, ப்ரீத்தி முகுந்தன் மலையாளத் திரையுலகிலும் தனது அறிமுகத்தைப் பதிவு செய்துள்ளார். ‘மைனே பியார் கியா’ என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை இயக்கியவர் அறிமுக இயக்குநரான ஃபைசல்.படத்தின் கதாநாயகனாக ஹ்ரிது ஹருன் நடித்துள்ளார். இவர், ‘முரா’ மற்றும் ‘All We Imagine As Light’ போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் மேலும் அஸ்கர் அலி, மிதுன், ஜெகதீஷ், முஸ்தஃபா, ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, ஜியொ பேபி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.இத்திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. படக்குழுவினரால் இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இப்படத்தின் கதைக்களம் எப்படி இருக்கும் என்பதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.