தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகையான விசித்ரா, ரசிகர்களிடையே ஒருகாலத்தில் தனித்துவமான இடத்தை பிடித்த நடிகையாக இருந்தார். திருமணமான பின்பு மூன்று மகன்களுடன் வாழ்ந்து வருகிறார், சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார்.

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வில் விசித்ரா உரையாற்றியபோது, “90களில் சினிமாவில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில், எனக்கு திருமணம் நடக்குமா என குழப்பமாக இருந்தது. சினிமாவில் இருந்ததால் வெளியிடங்களில் மிகுந்த மரியாதை கிடைத்தது. ஆனால் குடும்பத்தில்தான் உண்மையான மரியாதை உள்ளது. அப்போது திருமணம் வேண்டாமென, சிங்கிளாகவே இருக்கலாம் என எண்ணினேன்.
திருமணத்துக்குப் பிறகு வாழ்க்கை மிகுந்த சவால்களைக் கொண்டதாக மாறியது. அவற்றைக் கடந்து வாழும் வாழ்க்கையை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. ஒரு மகிழ்ச்சியான குடும்பம், அன்பான கணவர், குழந்தைகள் என அனைத்தும் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவை. இப்போது என் கணவரும், குழந்தைகளும் என்னுடன் இருப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது” என உருக்கமாகக் கூறினார்.