2023-ம் ஆண்டு வெளியான ‘ஜோ’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் பெரிய இடம் பிடித்த மாளவிகா மனோஜ், தற்போது தெலுங்கு திரைப்படத் துறையில் தனது பயணத்தைத் தொடங்கி இருக்கிறார்.

நடிகர் சுஹாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஓ பாமா அய்யோ ராமா’ எனும் படத்தில் மாளவிகா மனோஜ் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனையொட்டி நடைபெற்ற ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மாளவிகா மனோஜ், இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கான அதிர்ஷ்டம் எனக் குறிப்பிட்டார்.
அவர் கூறியதாவது, “பொதுவாக அதிகமான படங்களில் பெண்கள் பெறும் கதாபாத்திரங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. ஆனால், இந்த திரைப்படத்தில் எனக்குக் கிடைத்த கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதுவும் என் முதல் தெலுங்கு படத்தில் இப்படிப்பட்ட ஒரு கேரக்டரில் நடிப்பதற்கான வாய்ப்பு எனக்கு வந்திருப்பது என்பது ஒரு பெரிய அதிர்ஷ்டம்” எனத் தெரிவித்தார்.