நடிகர் விஜய் சேதுபதி தற்போது இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ள ‘தலைவன் தலைவி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஜூலை 25ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதற்கிடையே பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கும் புதிய திரைப்படத்தில் விஜய் சேதுபதி இணைந்துள்ளார். இதில், ‘வாத்தி’ படத்தில் நடித்த சம்யுக்தா மற்றும் நடிகை சார்மி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்னாத் மற்றும் ஜே.பி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் நாராயண ராவ் கொண்ட்ரொல்லா இணைந்து தயாரிக்கின்றனர். இதில் பாலிவுட் பிரபலமான நடிகை தபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத் நகரில் தொடங்கியது.
அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான செட்டில், விஜய் சேதுபதி மற்றும் சம்யுக்தா நடிக்கும் முக்கியமான காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.