நடிகர் மணிகண்டன் ‘காலா’, ‘ஜெய் பீம்’, ‘குட் நைட்’, ‘லவ்வர்’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடயே மிகப்பெரிய கவனத்தை பெற்றார்.அதேபோல் சமீபத்தில் வெளியான ‘குடும்பஸ்தன்’ அவருக்குப் பெரிய வெற்றியைத் தந்தது.

இந்நிலையில் பா.ரஞ்சித் தயாரிப்பில், சந்தோஷ் குமார் இயக்கும் புதிய படத்தில் மணிகண்டன் கதாநாயகனாக அறிமுகமாகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
“மக்கள் காவலன்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை வைத்து நடக்கும் அரசியலை மையமாகக் கொண்டது என்று கூறப்படுகிறது . இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.