‘வாத்தி’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ போன்ற படங்களைத் போன்ற வெற்றி படங்களை கொடுத்த தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி, இப்போது சூர்யாவின் 46-ஆவது படத்தை ஹைதராபாத்தில் இயக்கி வருகிறார்.

சமீபத்திய அவரது பேட்டி ஒன்றில், “சூர்யா 46 ஒரு அழகான குடும்பக்கதை. சஞ்சய் ராமசாமியை ஒட்டிய (கஜினி) மனநிலை கொண்ட ஒரு நாயகனை மையப்படுத்திய படமாக இது அமையும். ‘சார்’ (வாத்தி) படத்திற்கு இரண்டாம் பாகம் வராது. தனுஷ் அந்த கதையை ஒரு தனித்துவமுள்ள தயாரிப்பாகவே இருக்கட்டுமென்று விரும்பினார்.
ஆனால் ‘லக்கி பாஸ்கர்’-க்கு நிச்சயம் சீக்வல் இருக்கும். அதற்கான கதை இன்னும் எழுதவில்லை. நானும் துல்கரும் தற்போது வெவ்வேறு வேலைகளில் பிஸியாக இருந்தாலும், இரண்டாம் பாகம் உறுதியாக நடக்கும். கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளும் என்றார். துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, ராம்கி உள்ளிட்டோர் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.