Touring Talkies
100% Cinema

Saturday, July 5, 2025

Touring Talkies

மலையாள திரையுலகில் என்ட்ரி கொடுத்த இசையமைப்பாளர் சாய் அபயங்கர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சாய் அபயங்கர், ‘கட்சி சேர’ என்ற பாடலைப் பாடி இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். இந்த பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று இணையதளங்களில் வேகமாக பரவியது. அதனைத் தொடர்ந்து வெளியான ‘ஆச கூட’ என்ற பாடலுக்கும் இளைஞர்கள் மத்தியில் தீவிர ஆதரவு கிடைத்தது. இளம் வயதிலேயே இவரது இசையில் வெளியான இரு பாடல்களும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் ‘பென்ஸ்’ படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அல்லு அர்ஜூன் படம், சூர்யாவின் ‘கருப்பு’, ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ உள்ளிட்ட 10 படங்களில் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் ஷேன் நிகாம். அவர் சமீபத்தில் ‘மெட்ராஸ்காரன்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப் படத்தில் கலையரசன், நிஹாரிகா, ஐஸ்வர்யா ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ஷேன் நிகாம் நடிக்கும் அவரது 25வது படமான ‘பல்டி’யை அறிமுக இயக்குநரான உன்னி சிவலிங்கம் இயக்கியுள்ளார். இதில் அவருடன் பிரீத்தி அஸ்ரானி மற்றும் சாந்தனு பாக்கியராஜ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் முழுமையாக கபடி விளையாட்டை மையமாகக் கொண்டதாக அமைந்துள்ளது.‌ இந்த நிலையில், ‘பல்டி’ திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இது இவரது முதல் மலையாளத் திரைப்படம். இதற்காக உருவாக்கப்பட்ட புரோமோ வீடியோவில், நடிகர் மோகன்லால் அவரை வரவேற்கும் ஆடியோ இடம்பெற்றுள்ளது. சந்தோஷ் குருவில்லா தயாரிக்கின்ற இந்த படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் ஓணத் திருநாளை முன்னிட்டு வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News