நடிகர் சிம்பு அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். வடசென்னை பகுதிகளை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம் கேங்ஸ்டர் தழுவிய கதையமைப்பில் உருவாக உள்ளது. இந்த தகவல் வெளியானது முதல், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க உள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை எண்ணூரில் தொடங்கியது. மேலும், இந்தப் படத்திற்கான அறிவிப்பு வீடியோவும் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை, ‘வட சென்னை’ திரைப்படத்தினையொட்டிய கதைக்களமாக அமையும் என கூறப்படுகிறது.
இந்த படமானது சிம்புவின் 49-வது திரைப்படமாகும். இதில் சிம்பு இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார் என்றும் அதேபோல் இந்தப் படத்தில் ‘குட் நைட்’ புகழ் மணிகண்டன் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் நடிக்கும் கதாப்பாத்திரம், இந்தப்படத்திலும் ‘வட சென்னை 2’ படத்திலும் தொடர்ச்சியாக இடம்பெறும் முக்கியமான பாத்திரமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி, கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் இப்படத்தில் இணைந்திருப்பதாக இன்னும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளன.