ஹிந்தி மற்றும் மராத்தி மொழிப் படங்களில் நடித்து வந்த மிருணாள் தாக்கூர், தெலுங்கு சினிமாவில் துல்கர் சல்மானுடன் நடித்த ‘சீதா ராமம்’ திரைப்படம் மூலம் அறிமுகமாகி பெரும் வரவேற்பைப் பெற்றார். அந்தப் படம் ஹிட் அடைந்ததால், தென்னிந்திய சினிமாவிலும் அவருக்கு நல்ல அடையாளம் கிடைத்தது.

அதன்பின், தெலுங்கில் நடித்த ‘ஹாய் நானா’ என்ற திரைப்படமும் வெற்றிப் படமாக அமைந்தது. இதனால், மிருணாள் தாக்கூர் தற்போது தெலுங்கு திரைப்படத் துறையில் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ்வாக இருந்து வருகிற மிருணாள் தாக்கூர், தற்போது தாய்லாந்தில் பிரபலமாகியுள்ள ‘அண்ணனா பாத்தியே’ என்ற பாடலுக்கு, ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது அசத்தலான நடனமொன்றை ஆடியுள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவேற்றியதும், அவரது ரசிகர்கள் அதை வைரலாக்கி பலரும் பாராட்டியுள்ளனர்.