‘கண்ணப்பா’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தமிழ் நடிகை ப்ரீத்தி முகுந்தன். திருச்சியில் பிறந்து வளர்ந்த இவர், இஞ்சினியரிங் படிப்பை முடித்த பின்னர் மாடலிங் துறையில் பயணத்தை தொடங்கி, பின்னர் சினிமாவில் கால் வைத்தார். கடந்த வருடம் வெளியான ‘ஸ்டார்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான ப்ரீத்தி, அதற்கு முன்பாக தெலுங்கில் ‘ஓம் பீம் புஷ்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது மலையாளத்தில் உருவாகியுள்ள ‘மைனே பியார் கியா’ என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

தற்போது இவர் மலையாளத் திரைப்படமான ‘சர்வம் மாயா’வில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்துவருகிறார். இந்தப் புதிய திரைப்படத்தின் முதல் பார்வை காட்சி நேற்று வெளியிடப்பட்டது.
இந்த படம் 2025ம் ஆண்டின் கிறிஸ்துமஸ் நாளில் திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது. மலையாள நடிகர் அஜு வர்கீஸ் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் 30 நாட்கள் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. பிரபல மலையாள இயக்குநரான சத்யன் அந்திக்காடின் மகனாகிய அகில் சத்யன் இப்படத்தை இயக்குகிறார்.