கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் கிச்சா சுதீப் கடந்த 11 ஆண்டுகளாக பிக்பாஸ் கன்னடத்தின் தொகுப்பாளராக இருந்து வந்தார். ஆனால், கடந்த 11வது சீசன் துவங்குவதற்கு முன்பே, இந்த ஒரே சீசனை மட்டுமே தொகுத்து வழங்கி, அதன் பிறகு இந்தப் பணியிலிருந்து விலகி, தனது நடிப்புப் பயணத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளப்போவதாக கூறியிருந்தார்.

அதனால், அவரது பதிலாக இந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கப்போகிறார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. அதே சமயம், இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு சுதீப்பின் பங்களிப்பு மிக முக்கியமானது என்பதால், அவரை மாறாக யாரையும் மாற்றுவதில் நிர்வாகமும் தயக்கம் காட்டியது.
இதையடுத்து, ஒரு முக்கிய நிபந்தனையின் அடிப்படையில் சுதீப் இந்த நிகழ்ச்சியை மேலும் நான்கு ஆண்டுகள் தொகுத்து வழங்க ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 2025ஆம் ஆண்டு அவர் நடித்து வரும் ‘பில்லா ரங்கா பாஷா’ திரைப்படம் வெளியாக வேண்டும் என்பதே அவர் வைத்த நிபந்தனை. அதற்கான படப்பிடிப்பு பணிகளில் ஈடுபடவேண்டிய நிலையில் இருப்பதால், பிக்பாஸ் 12வது சீசனை நான்கு வாரங்கள் தள்ளி துவக்க முடியுமானால், மீண்டும் தொகுப்பாளராக வரத் தயார் என்று கூறியுள்ளார். இதற்கு நிகழ்ச்சி நிர்வாகமும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.