மம்முட்டி திரைப்படத்துறையில் அடியெடுத்து வைக்கும் முன், எர்ணாகுளத்தில் அமைந்த மகாராஜா கலைக்கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார். பின்னர், அரசு கலைக்கல்லூரியில் சட்டப்பாடங்களை பயின்றார். இந்நிலையில், தற்போது அவர் படித்த மகாராஜா கலைக்கல்லூரியில் மம்முட்டியின் திரைப்படப் பயணம் பாடப் புத்தகத்துக்குள் சேர்க்கப்பட்டுள்ளது.

நான்கு ஆண்டுகளாக நடைபெறும் பி.ஏ. வரலாறு (ஹானர்ஸ்) பாடத்தின் இரண்டாம் ஆண்டில் இருக்கும் மாணவர்களின் ‘ஹிஸ்டரி ஆஃப் மலையாளம் சினிமா’ என்ற பாடப்புத்தகத்தில் மம்முட்டியின் வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது.
மேலும், சமூகத்தில் தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்துத் தன்னால் முதன்முதலாக பட்டம் பெற்ற தாட்சாயினி வேலாயுதம் என்ற பெண்ணின் வாழ்க்கை வரலாறும், இந்த ஆண்டிற்கான ‘இந்திய சமூக அரசியல்’ எனும் பாடத்தில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.