சமீபத்தில் தெலுங்கில், நடிகர் நானி தயாரிப்பில் வெளிவந்த ‘கோர்ட் ஸ்டேட் vs நோபடி’ திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டபோதிலும் பல மடங்கு வசூலை பெற்றது. ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன், உயர்சாதியிலுள்ள பெண்ணை காதலிப்பதால், அவனை பழிவாங்க பாக்ஸோ சட்டம் தவறுதலாக பயன்படுத்தப்படுகிறது. அந்த வழக்கிலிருந்து அவனை எப்படி ஜூனியர் வக்கீலான நாயகன் பிரியதர்ஷி புலிகொண்டா காப்பாற்றுகிறார் என்பதே இப்படத்தின் மையக் கருத்தாகும்.

இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் நீதிமன்றத்திற்குள் செறிவாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. ஆனால், அதில் வரும் திரைக்கதையின் வேகம் மற்றும் வசனங்களின் நேர்த்தியால், படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால், படம் சூப்பர் ஹிட்டாக மாறியது.
தற்போது, இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. அதன் உரிமையை நடிகர் பிரசாந்தின் தந்தையுமான இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் தியாகராஜன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்தப் படத்தை தமிழில் தியாகராஜனே இயக்கப்போகிறாரா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.