Touring Talkies
100% Cinema

Thursday, June 26, 2025

Touring Talkies

3BHK திரைப்படம் ஒரு உணர்வுப்பூர்வமான படம் – இயக்குனர் ராம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள திரைப்படம் ‘3BHK’. இப்படத்தில் சரத்குமார், தேவயானி, மேதா ரகுநாத், சைத்ரா ஆச்சர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இன்று இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் ராம் கூறியதாவது: “என்னுடைய ‘தங்கமீன்கள்’ படம் வெளியாவாமல் இருந்த நேரத்தில் எனக்கு உதவியவர் தயாரிப்பாளர் அருண் விஷ்வா. அவர் ஒரு நல்ல மனிதர். உற்சாகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கக்கூடியவர்.

நடிகர் சித்தார்த்தை பற்றி, ‘அதிபுத்திசாலி’, விளைவுகளை எண்ணாமல் தைரியமாக பேசக்கூடியவர்’, ‘அகங்காரமானவர்’ போன்ற ஒரு பிம்பம் உள்ளது. ஆனால் என் பார்வையில் சித்தார்த் ஒரு அடிமுட்டாள். இதை நான் சொல்வதற்கான காரணம் என்னவென்றால், அவர் வளர்ந்த குழந்தைபோன்றவர். நாங்கள் இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள்.

இன்று வரை நாங்கள் அந்த பள்ளியிலிருந்து வெளியே வரவேயில்லை. சித்தார்த் இன்னும் குழந்தை மனதிலேயே வாழ்கிறார். எப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட முடியாதவர். பக்கவிளைவுகள் பற்றியோ, எதிர்விளைவுகள் பற்றியோ யோசிக்காதவர். மனதிற்குப் பிடித்ததை அதே நேரத்தில் செய்பவர். காற்றில் இறக்கும் போல வாழ்க்கையை நடத்துகிறவர். ஒரு இலகுவான மனதுடையவர். அந்த மனநிலையால் தான் சித்தார்த் இளமையாகவே உள்ளார்.

‘3BHK’ ஒரு உணர்வுப்பூர்வமான திரைப்படம். இது சொந்த வீடு குறித்த உணர்வுகளைப் பற்றியது. சொந்த வீடு என்பது வெறும் ஒரு மரியாதை அல்ல; அது நம் பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும், அவர்கள் அந்த வீட்டில் எப்படி வாழப்போகிறார்கள் என்பதைப் பற்றிய ஒரு பெரும் உணர்வின் பிரதிபலிப்பாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News