சித்தார்த் தனது 40-வது திரைப்படமாக ‘3 BHK’ படத்தில் நடித்து இருக்கிறார். ‘8 தோட்டாக்கள்’, ‘குருதி ஆட்டம்’ ஆகிய படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் சித்தார்துக்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். அவருடைய தங்கையாக மீதா ரகுநாத் நடித்துள்ளார். மேலும், சித்தார்தின் பெற்றோர்களாக சரத்குமார் மற்றும் தேவயாணி நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளவர் அம்ரித் ராம்நாத். ‘3 BHK’ திரைப்படம் வருகிற ஜூலை 4-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘3 BHK’ திரைப்படத்தின் டிரெய்லர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.