‘வேட்டையன்’ படத்தை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சோபின் ஷாஹிர், சத்யராஜ், சுருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், பாலிவுட் நடிகர் அமீர்கான் ஒரு கேமியோ வேடத்தில் நடிக்கிறார்.
இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நடிகை பூஜா ஹெக்டே, இதில் இடம்பெறும் ஒரு சிறப்பு பாடலில் நடனமாடியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. தங்கக் கடத்தலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாவது திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘சிக்கிட்டு’ என்ற பர்ஸ்ட் சிங்கிள் வருகிற ஜூன் 25-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.