விஜய் தேவரகொண்டா நடித்துள்ள “கிங்டம்” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தொடர்பான குழப்பம் தொடர்ந்து நீடித்து வருவதாக கூறப்படுகிறது. படத்தின் தயாரிப்பாளர்கள் இதுவரை வெளியீட்டு தேதியை முடிவு செய்யவில்லயாம். ஏற்கனவே இரண்டு முறை வெளியீடு தள்ளிப்போன நிலையில், தற்போது ஜூலை 25 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளை படக்குழு பரிசீலித்து வருகிறது. எனினும், இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், படக்குழு நாளை படம் வெளியீடும் தொடர்பான அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. “கிங்டம்” படக்குழுவும் நாளை தங்கள் வெளியீட்டு அறிவிப்பை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
கவுதம் தின்னனுரி இயக்கியுள்ள இந்த படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.