ஜீ தமிழில் விரைவில் வெளியாக உள்ள நேரடி புதிய தொடர் ‘வாரிசு’. இந்த தொடரில் ஜெய் எஸ்.கே. நாயகனாகவும், ஸ்வேதா நாயகியாகவும் நடிக்க இருக்கிறார்கள். தற்போது இதன் புரமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை. பிரமாண்ட ஜமீன் ராஜ்யத்தை கட்டி ஆள்கிறார் அதிகாரத் திமிர் பிடித்த ஜமீன் வாரிசு. ஆனால் அவரின் மகனோ குடி கும்மாளம் என்று ஊதாரித்தனமாக திரிகிறார். தனது ஜமீனையே கட்டி ஆளத் தகுதியான ஒரு மருமகளை தேடுகிறார் ஜமீன் ராணி. ஒரு ஏழைப்பெண் அந்த ஜமீனுக்கு மருமகளாக வருகிறாள். அவள் வந்த பிறகு ஜமீன் ராணி, கணவன், மனைவி இவர்களுக்கு இடையில் நடிக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து இந்த தொடர் உருவாகிறது.
