மார்கோ’ திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் ஷரீப் முஹமது தற்போது ‘கட்டாளன்’ என்ற புதிய திரைப்படத்தைத் தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தில் ஆண்டனி வர்கீஸ் பெப்பே முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை பால் ஜார்ஜ் இயக்குகிறார். இப்படத்திற்கு ‘காந்தாரா’ திரைப்படத்திற்காக பாராட்டுகள் பெற்ற இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.
இந்தப் படம் பான் இந்தியா அளவில் உருவாகி வருகிறது. சமீபத்தில் சுனில் மற்றும் கபீர் துஹான் சிங் இப்படத்தில் இணைந்த நிலையில், தற்போது கதாநாயகியாக நடிகை ரஜிஷா விஜயனும் இணைந்திருக்கிறார்.