Touring Talkies
100% Cinema

Tuesday, September 9, 2025

Touring Talkies

துல்கர் சல்மான் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷினி !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

துல்கர் சல்மான் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான வேபேரர் பிலிம்ஸ் மூலம் அடுத்த படத்தை வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறார். இந்தப் படத்தின் தலைப்பும், அதற்கான முதல் லுக்கும் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய திரைப்படத்தில், ‘பிரேமலு’ புகழ் நடிகர் நஸ்லேன் மற்றும் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இது துல்கர் சல்மானின் “வேபேரர் சினிமாடிக் யுனிவர்ஸ்” எனப்படும் புதிய திரைப்பட உலகத்துக்கான ஆரம்பமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

இப்படத்தில் துல்கர் சல்மானும், டோவினோ தாமஸ் மற்றும் இன்னும் சிலர் சிறப்பு தோற்றங்களில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பதால், இந்த யுனிவர்ஸ் குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படத்தை டொமினிக் அருண் இயக்குகிறார். படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News