சமூக வலைதளங்களில் பெரிதும் பிரபலமாக இருக்கும் நிஹாரிகா, கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ‘பெருசு’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க உள்ள மூன்று திரைப்படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த நிலையில், ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடித்துள்ள ‘மிஷன்: இம்பாசிபிள் – தி பைனல் ரெக்கனிங்’ திரைப்படத்தின் பிரீமியர் நிகழ்வில் நிஹாரிகா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அந்த நேரத்தில், டாம் குரூஸுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து மகிழ்ந்த நிஹாரிகா,
“இது போன்ற தருணங்கள் கனவில் கூட நடக்கும் என நினைக்க தைரியம் இல்லாத எனக்கு, இது நிகழ்ந்தது உணர்வுபூர்வமான தருணமாக இருந்தது. இதை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் என் நன்றிகள்,” எனப் பதிவிட்டு நெகிழ்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகின்றன.