சூரியின் நடிப்பில் வெளியான ‘மாமன்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி, பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தை பார்த்த ஒரு சிறுமி படம் முடிந்தபின் கண்ணீர்விட்டு அழுதுள்ளார். அந்த நேரத்தில், நடிகர் சூரியின் நண்பர் ஒருவர் அந்தச் சம்பவத்தை சூரிக்கு வீடியோ காலில் தெரிவித்தார். உடனடியாக சூரி அந்தச் சிறுமியிடம் வீடியோ காலின் மூலம் நேரில் பேசிச் சமாதானம் கூறியுள்ளார்.
இந்த வீடியோவை தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட சூரி, அந்தப் பாப்பாவின் தாய்மாமாவிற்கு இந்தப்படத்தின் வாயிலாக தனது அன்பும், மனமார்ந்த வாழ்த்துகளும் செலுத்தியுள்ளார். மேலும், “இது எனக்கு ஒரு ஸ்பெஷல் விமர்சனம். ‘மாமன்’ படம் பார்த்த பிறகு, அந்த பாப்பா தன்னுடைய தாய்மாமாவை மிகவும் மிஸ் பண்ணுறாங்க. இப்படியான உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு தருணம் எனக்கு கிடைத்திருக்கிறது என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தன்னுடைய அன்பான தாய்மாமாவை நினைவில் வைத்து உணர்வோடு வருந்தும் அந்தப் பாப்பாவுக்காக, இந்தப்படத்தின் வாயிலாக என் மனமார்ந்த அன்பும் வாழ்த்துகளும்” என்று சூரி தெரிவித்தார்.