தமிழ் சினிமாவில் புதிய இயக்குநராக அறிமுகமான அபிஷன் ஜீவ்னித் இயக்கிய ‘டூரிஸ்ட் பேமிலி’ என்ற திரைப்படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், உலகம் முழுவதும் ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்து வர்த்தக ரீதியாகவும் வெற்றிபெற்றது. திரைப்படத் துறையைச் சேர்ந்த ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் போன்ற பல பிரபலங்களும் இந்தப் படத்தை பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில், இந்தப் படத்தை முன்பே பார்த்திருந்த தனுஷ் இயக்குநர் அபிஷன் ஜீவ்னித்தை நேரில் சந்தித்து, அவரிடம் ஏதாவது வித்தியாசமான கதை உள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளார். அந்த சமயங, அபிஷன் ஜீவ்னித் தனுஷுக்காக ஒரு கதையை கூறியுள்ளார் என்றும், அந்த கதை தனுஷூக்கு பிடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த பேச்சுவார்த்தை தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.