லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது அதற்கான பிந்தைய தயாரிப்பு பணிகள் (போஸ்ட் புரொடக்ஷன்) தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை இந்தப் படம் குறித்து சிறிய தகவல்களையும் வெளியாவாமல் பாதுகாத்திருந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இப்போது படத்தைப் பற்றிய விவரங்களை பகிர்ந்துள்ளார்.

முக்கியமாக, இந்த படத்தில் நாகார்ஜுனா, அமீர் கான், உபேந்திரா போன்ற பிற மொழித் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், ரஜினிகாந்துடன் முதல்முறையாக இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சத்யராஜ் ரஜினியுடன் இணைந்து நடிக்கின்றது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது சத்யராஜ் “கூலி” படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்திருப்பதற்கு, அதன் கதைக்கும், சத்யராஜுக்கு வழங்கப்பட்டுள்ள கதாபாத்திரத்திற்கும் பெரும் பங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், ரஜினிகாந்த் நடித்த ஒரு முக்கியமான காட்சியை சத்யராஜிடம் முன்பாகவே காண்பித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அந்த காட்சியைக் கண்ட சத்யராஜ், “சிலர் திரையில் ஹீரோவாக நடிக்கிறார்கள். ஆனால் யாராவது நிஜ வாழ்க்கையில் உண்மையிலேயே ஹீரோவாக இருக்கக்கூடியவர்கள் இருக்கின்றனர் என்றால், அது ரஜினிதான்” என்று அவர் புகழ்ந்ததாக, லோகேஷ் கனகராஜ் தான் தனது பேட்டியில் தெரிவித்தார்.