மலையாளத்தில் இதுவரை வெளியான படங்களில் மோகன்லால் நடித்த எம்புரான், ஷாபின் சாகிர் நடித்த மஞ்சும்மல் பாய்ஸ், டொவினோ தாமஸ் நடித்த 2018 ஆகிய படங்கள் மட்டுமே 200 கோடி வசூலை தாண்டி உள்ளன. இந்நிலையில், சமீபத்தில் தருண்மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா நடித்த தொடரும் படமும் 200 கோடியை தொட்டு அந்த வரிசையில் இடம் பிடித்துள்ளது. இன்னொரு திரிஷ்யம் என்று கொண்டாடப்படும் தொடரும் தமிழிலும் டப்பாகி 70க்கும் அதிகமான தியேட்டரில் வெளியாகி உள்ளது.
