தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு தற்போது ‘தக் லைப்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த மாதம் வெளியாவதற்காக தயாராகி வருகிறது. இதற்குப் பிறகு, அவர் இன்னும் பெயரிடப்படாத மூன்று புதிய திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் சிம்பு, அங்கு பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடம் சில உடல் ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகளைப் பகிர்ந்துள்ளார்.
அதில்,“இந்த வயதில் நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம், மகிழ்ச்சியாக இருக்கலாம். இந்த வயதில் பெரிய பிரச்சனைகள் இருப்பதில்லை. ஆனால், அதற்காக உங்கள் விருப்பமாக இருக்கும் அனைத்தையும் சாப்பிட்டு உடலை கெடுக்க வேண்டாம். பின்பு எதிர்காலத்தில் சிக்கல்கள் வரும். இரவில் மிக அதிகமாக சாப்பிட்டு உடனே தூங்கும் பழக்கத்தை தவிருங்கள். அதை தவிர்த்து, சற்று குறைவாக சாப்பிட்டு, சிறிது பசியுடன் தூங்கினால், உடல் நல்ல நிலையில் இருக்கும்” என அவர் அறிவுரை கூறினார்.