பா.இரஞ்சித் இயக்கிய ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் மாரியம்மா எனும் கதாபாத்திரத்தில் நடித்த துஷாரா விஜயன், அந்தப் படத்தின் மூலம் பெரிய புகழைப் பெற்றிருந்தார். அதன் பிறகு, தனுஷுடன் ‘ராயன்’, ரஜினியுடன் ‘வேட்டையன்’ மற்றும் விக்ரமுடன் ‘வீர தீர சூரன்’ போன்ற முக்கியமான படங்களில் நடித்துள்ளார்.

‘ராயன்’ மற்றும் ‘வீர தீர சூரன்’ படங்களில் துஷாரா விஜயனின் ஆக்ஷன் காட்சிகள் பாராட்டுக்களை பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. உடல்நலனில் கவனம் செலுத்தும் அவர், சமீப காலமாக பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இவ்வாறு அவர் மேற்கொண்டு வரும் பயிற்சிகள், புதிய ஏதாவது ஆக்ஷன் திரைப்படத்துக்காகவா அல்லது ‘சார்பட்டா பரம்பரை 2’ திரைப்படத்துக்காகவா என்பது குறித்து ரசிகர்களிடையே பல யூகங்களை உருவாக்கியுள்ளது.