இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபல பாலிவுட் நடிகை சோனியா பன்சால் தன் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தான் சினிமாவை விட்டு விலகுவதாக தெரிவித்திருக்கிறார். இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் சோனியா பன்சால் கூறியதாவது,என்னிடம் பணம், புகழ், பெயர் எல்லாம் இருந்தது. ஆனால் நிம்மதி இல்லை. நிம்மதி இல்லாமல் பணம் இருந்து என்ன பலன்?. அடுத்தவர்களுக்காக அனைத்தையும் செய்து நம்மை நாம் மறந்துவிடுகிறோம். எப்பொழுதும் பெர்ஃபக்டாக இருக்க வேண்டும், நிறைய சம்பாதிக்க வேண்டும் என ஓடுவதில் என்னை நான் இழந்துவிட்டேன்.வாழ்க்கையில் எனக்கு என்ன தேவை என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன். சினிமா துறையில் எனக்கு பெயர் கிடைத்தது, அங்கீகாரம் கிடைத்தது ஆனால் அமைதி கிடைக்கவில்லை. இனியும் என்னால் போலியாக இருக்க முடியாது. எனக்கு நான் உண்மையாக இருக்க விரும்புகிறேன். லைஃப் கோச்சாக இருக்கப் போகிறேன். நம் வாழ்க்கை எப்பொழுது மாறும் என நமக்கு தெரியாது. எப்பொழுது மரணம் வரும் என தெரியாது. அதனால் உண்மையாக வாழவில்லை என்றால் இந்த வாழ்க்கை பயணத்தில் என்ன அர்த்தம் இருக்கிறது?. மன நிம்மதி தான் முக்கியம். அதற்காக புகழை விடத் தயாராக இருக்கிறேன் என்றுள்ளார்.
