தெலுங்குத் திரையுலகில் முன்னணியில் உள்ள நடிகர் விஜய் தேவரகொண்டா. கடந்த 26ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

அந்த விழாவில் இந்தியா – பாகிஸ்தான் தொடர்பான ஒரு கருத்தை அவர் தெரிவித்தார். அந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனிடையே, அவருக்கு எதிராக காவல்துறையில் வழக்குப் பதியப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, விஜய் தேவரகொண்டா தனது பேச்சு குறித்த விளக்கத்தை வெளியிட்டுள்ளார்.
அதில், “’ரெட்ரோ’ விழாவில் நான் கூறிய கருத்து சிலரிடையே குழப்பத்தையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கலாம். அதற்காக நான் மனமார்ந்த மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். எதையையும் குறிவைத்தோ, யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடனோ அந்த கருத்தை நான் கூறவில்லை,” என தெரிவித்துள்ளார்.