நடிகர் சிம்பவின் 49வது படத்தை பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணியாற்றுகிறார்.

டிராகன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த கயாடு லோஹர் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது ஹீரோவாக வலம் வரும் சந்தானம், தன் நண்பர் சிம்புவுக்காக இந்த படத்தில் காமெடி ரோலில் நடிக்கிறார்.
இதுவரை தலைப்பு அறிவிக்கப்படாத இந்த படத்தின் பூஜை விழா நாளை (மே 3) நடைபெற இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சிம்பு ஒரு கல்லூரி மாணவராக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற உள்ளதாக சொல்லப்படுகிறது.