Touring Talkies
100% Cinema

Tuesday, April 29, 2025

Touring Talkies

பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி என் கருண் காலமானார்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாள சினிமாவுக்கு தேசிய மற்றும் சர்வதேச தளங்களில் பெருமை சேர்த்த இயக்குநர்களில் முக்கியமானவர் ஷாஜி என் கருண். மலையாள முற்போக்கு கலை இலக்கிய சங்கத்தின் மாநில குழு தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். இவர் இயக்கிய ‘Piravi’ (1988), ‘Vanaprastham’ (1999), Kutty Srank (2009) திரைப்படங்களுக்கு மூன்று தேசிய விருதினை பெற்றவர். இவரது Piravi, Swaham, மற்றும் Vanaprastham திரைப்படங்கள் கேன்ஸ் திரைப்பட விழாவில் தேர்வாகி பாராட்டுகளைப் பெற்றன.திரைத்துறையில் சிறந்து விளங்கிய ஷாஜி என்.கருண், கேரள அரசின் வாழ்நாள் சாதனையாளுக்கான உயரிய விருதான ‘JC Daniel Award’ விருதைப் பெற்றவர். இதுதவிர திரைத்துறையில் பல உயரிய விருதுகளைக் குவித்தவர். பல்வேறு சாதனைகள் படைத்து மலையாள சினிமாவுக்கு தேசிய மற்றும் சர்வதேச தளங்களில் பெருமை சேர்த்த ஷாஜி என் கருண், இன்று (ஏப்ரல் 28. 2025), தனது 73-வது வயதில் தற்போது காலமாகிவிட்டார். திரைத்துறையினர் பலரும் ஷாஜி என் கருண் அவர்களுக்கு தங்களது உருக்கமான இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News