தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் மாளவிகா மோகனன், தற்போது தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக ‘தி ராஜா சாப்’ திரைப்படத்திலும், மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக ‘ஹிருதயபூர்வம்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், சினிமா துறையில் ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே பாரபட்சம் உள்ளதாக மாளவிகா தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறியபோது, “சில நடிகர்கள் பெண்களை மதிப்பவர்கள் போல் தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அந்த முகமூடியை அவர்கள் தேவையான நேரங்களில் அணிந்து கொண்டு நல்ல பெயர் வாங்குகிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்படிப்பட்ட முகமூடி அணிந்த பலரை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் தங்களை புத்திசாலிகள் என நினைத்துக் கொள்கிறார்கள்.
பெண்களை மதிக்கும் விதமாக எப்போது பேச வேண்டும் என்பது வரை அவர்கள் கணக்கிட்டு செய்கிறார்கள். ஆனால் கேமரா இல்லாத இடங்களில் அவர்கள் நடத்தை எவ்வளவு மாறிப் போகிறது என்பதையும் நேரில் பார்த்துள்ளேன். இந்த பாசாங்குத்தனமும், ஆண்களை ஒரு மாதிரி, பெண்களை இன்னொரு மாதிரி பார்ப்பது சினிமாவில் ஆழமாக பதிந்திருக்கிறது. இது எப்போது முடியும் என்பதையே தெரியவில்லை,” என்றார்.