1990கள் மற்றும் 2000களில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகரான அப்பாஸ், அவருக்கென தனி ரசிகர் மன்றம் இருந்தது குறிப்பிடத்தக்கது. 2014ஆம் ஆண்டு வெளியான ‘ராமானுஜர்’ திரைப்படத்திற்கு பிறகு அப்பாஸ் எந்த ஒரு திரைப்படத்திலும் நடித்ததில்லை.

இதனையடுத்து அவர் தனது குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டில் ஆகியதாக தகவல்கள் வெளியாகின. அங்கு அவர் பெட்ரோல் பங்க், மெக்கானிக் வேலை, கட்டுமான பணிகள் போன்ற கிடைக்கும் வேலைகளை செய்துவருகிறார் என்பதும் குறிப்பிடப்பட்டது.
தற்போது, சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு அப்பாஸ் மீண்டும் தமிழ் திரையுலகில் காலடி பதிக்க உள்ளார். புஷ்கர்-காயத்ரி தயாரிப்பில், இயக்குநர் சற்குணம், நடிகை துஷாரா விஜயனை வைத்து புதிய ஒரு வெப் தொடரை இயக்கி வருகிறார். இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அப்பாஸ் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடரின் படப்பிடிப்பு ஏற்கனவே 40 நாட்கள் நிறைவு பெற்றுள்ளதாகவும், இன்னும் 30 நாட்கள் படப்பிடிப்பு மீதமுள்ளதாகவும் கூறப்படுகிறது.