சமூக சீர்திருத்த இயக்கத்தினை முன்னெடுத்த ஜோதி ராவ் புலேவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் ‘புலே’. இந்த படத்திற்கு எதிர்ப்பு எழுந்ததால், வெளியீட்டு தேதி பின்னோக்கி மாற்றப்பட்டது.

‘புலே’ திரைப்படம் தணிக்கை குழுவிடம் இன்னும் நிலுவையிலிருப்பதால், இயக்குநர் அனுராக் காஷ்யப் அதனை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது, “இந்த நாட்டில் சாதிகள் இல்லையென்றால், ஜோதிபா மற்றும் சாவித்ரிபாய் புலே அவர்கள் சாதியத்தை எதிர்த்துப் போராட வேண்டிய தேவை எதற்காக இருந்தது? ஒரு திரைப்படம் தணிக்கைக்கு சென்ற பிறகு, நால்வரையாவது சென்சார் அதிகாரிகள் பார்வையிடுவதையும், பிறகு சில குழுக்களால் மறுக்கப்படுவதையும் எப்படி ஏற்க முடியும்? இங்கே மொத்த அமைப்பும் தவறானது” என்று தனது மன வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.