Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

தனது நீண்ட நாள் காதலரை கரம்பிடித்த நடிகை அபிநயா !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘நாடோடிகள்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி புகழ் பெற்றவர் நடிகை அபிநயா. தொடர்ந்து பல தமிழ்ப்படங்களில் நடித்து வந்துள்ளார். மலையாள சினிமாவைச் சேர்ந்த இவருக்கு பேசும் திறனும் கேட்கும் திறனும் இல்லை என்றாலும், தனது சிறந்த நடிப்புத் திறமையால் பலரிடமிருந்தும் பாராட்டுக்களை பெற்றவர். தற்போது இவர் தமிழில் ‘மூக்குத்தி அம்மன் 2’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அபிநயா கடந்த 15 ஆண்டுகளாக வெகசனா கார்த்திக் என்ற ஐதராபாத்தைச் சேர்ந்தவரை காதலித்து வந்துள்ளார். கார்த்திக்கும் அபிநயாவைப் போலவே பேச்சுத் திறன் மற்றும் செவித்திறனில் சவால்கள் உள்ளவர். சமீபத்தில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கார்த்திக்குடன் எடுத்த புகைப்படத்தையும் அபிநயா சமீபத்தில் தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதன்பின், திருமணத்துக்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்றன.

இந்நிலையில், அபிநயா மற்றும் வெகசனா கார்த்திக் ஆகிய இருவரும், ஐதராபாத்தில் குடும்ப பாரம்பரிய முறையைப் பின்பற்றி திருமணத்தில் இணைந்தனர். மணமக்கள் இருவரும் பாரம்பரிய கலையுடைகளை அணிந்து திருமணத்தில் கலந்துகொண்டனர். இதனைப்பற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் விரைவாக பரவி வைரலாகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News