தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான பவன் கல்யாண், அரசியல்வாதராகவும் செயல்பட்டு வருகிறார். இவர் தெலுங்கு சினிமாவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். தற்போது இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் உருவாகும் ‘ஓஜி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.

இப்படத்தில் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி, பிரகாஷ் ராஜ், ஸ்ரீயா ரெட்டி, அர்ஜுன் தாஸ், ஷாம் மற்றும் ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை டி.வி.வி. என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் டி.வி.வி. தனய்யா தயாரிக்கிறார். மேலும், பிரபல இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் இடம்பெறும் முதல் பாடலான ‘தே கால் ஹிம் ஓஜி’ என்ற பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். இந்தப் பாடல் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.