நடிகர் நானி தயாரித்த ‘கோர்ட் – ஸ்டேட் வெர்சஸ் எ நோபடி’ ஓடிடி-யில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது. இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிகரமான படமாக அமைந்தது. இந்த திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் பிரியதர்சினி, சிவாஜி, ஹர்ஷ் ரோஷன் மற்றும் ஸ்ரீ தேவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விஜய் புல்கானின் இசையமைத்தார், நடிகர் நானி இந்தப் படத்தை தயாரித்திருந்தார்.நெட்பிளிக்ஸில் ஓடிடி-யில் இந்த திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகி அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.
